நடிகர் விவேக்கின் கடைசி விருது.. மகள் போட்ட நெஞ்சை உருக வைக்கும் பதிவு

நடிகர் விவேக் சிறந்த காமெடி நடிகருக்கான விருதை தாராள பிரபு படத்திற்காக பெற்றுள்ளார்

நடிகர் விவேக்கின் கடைசி விருது.. மகள் போட்ட நெஞ்சை உருக வைக்கும் பதிவு

மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தனது காமெடி மூலம் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளார்.

அவரின் திரைப்படங்களில் சமூக கருத்துக்களை காமெடி கலந்து கூறுவதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இவர் நடிப்பில் கடைசியாக தாராள பிரபு என்ற படம் வெளியானது. 

அந்தப் படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் அவர் நடித்தார். தற்பொழுது சைமா கடந்த ஆண்டுக்கான விருதினை வழங்கியுள்ளது. இதில் நடிகர் விவேக் சிறந்த காமெடி நடிகருக்கான விருதை தாராள பிரபு படத்திற்காக பெற்றுள்ளார். இவ்விருதினை நடிகர் யோகிபாபு விவேக்கின் சார்பாக பெற்றுக்கொண்டார்.

இச்செய்தியினை நடிகர் விவேக்கின் ட்விட்டர் பக்கத்தில் அவருடைய மகள் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தன்னுடைய அப்பா விருதினை பெற்றதற்கு தாராள பிரபு குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இவ்விருதினை வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்து கொடுத்த நடிகர் யோகிபாபுவிற்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்து உள்ளார்.