முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நடிகர் விஜய்சேதுபதி

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் நடிகர் விஜய்சேதுபதி வழங்கினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நடிகர் விஜய்சேதுபதி

தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது. 

கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

இதனை தொடர்ந்து பலரும் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய்சேதுபதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்கினார்.