டோனி அடித்த பவுண்டரிக்கு ”தல தல” என டிவி முன் துள்ளிக்குதித்த நடிகர் சூரி..!வைரலாகும் வீடியோ

மும்பை - சென்னை அணிகளிடையே நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கடைசி பந்தில் டோனி அடித்த பவுண்டரியை பார்த்து துள்ளி குதித்த நடிகர் சூரியின் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

டோனி அடித்த பவுண்டரிக்கு ”தல தல” என டிவி முன் துள்ளிக்குதித்த நடிகர் சூரி..!வைரலாகும் வீடியோ

ஐ.பி.எல் தொடரின் 33 வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் சென்னை - மும்பை அணிகள் பலபரீட்சை நடத்தின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 155 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கியது.

விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில், கவனமாக ஆட்டத்தஹி தொடங்கிய சென்னை அணி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தது. அடுத்ததாக 2 வது பந்தில் பிராவோ  1 ரன் மட்டுமே எடுத்தார். மீதம் 4 பந்துகளில் 16 ரன்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலையில் களமிறங்கிய தோனி, முதல் 3 பந்துகளில் 12 ரன்கள் அடிக்க, கடைசி பந்தில் பவுண்டரி அடித்தால் வெற்றி என்ற நிலையில் அசத்தலான ஒரு பவுண்டரி அடித்து சென்னை அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.  

இந்நிலையில் இந்த போட்டியை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த நடிகர் சூரி, கடைசி பந்தில் தல தோனி பவுண்டரி அடித்ததும் துள்ளிக்குதித்து வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்த வீடியோவை நடிகர் சூரி ’தல தல தான்’ என்று கேப்ஷன் போட்டு பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.