"சந்திரமுகி 2" சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஆசி பெற்றார் நடிகர் ராகவா லாரன்ஸ்!!

"சந்திரமுகி 2" படப்பிடிப்பை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஆசி பெற்றார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

"சந்திரமுகி 2" சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஆசி பெற்றார் நடிகர் ராகவா லாரன்ஸ்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. இதன் பிறகு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க பி.வாசு நிறைய முயற்சிகளை செய்து வந்தார். ஆனால் நடிகர் ரஜினிகாந்த சந்திரமுகி 2ல் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை

இந்நிலையில், 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகுகிறது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.

இந்நிலையில், சந்திரமுகி 2 படப்பிடிப்பு மைசூரில் இன்று தொடங்குகிறது..  இதற்கிடையில், படப்பிடிப்பு தொடங்கும் முன் ராகவா லாரன்ஸ் தனது குரு ரஜினிகாந்திடம் ஆசிர்வாதம் பெற்றுள்ளார். இது குறித்த புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராகவா லாரன்ஸ்.