குக் வித் கோமாளி புகழுக்கு கல்யாணம்!!!

நடிகர் புகழ் இன்று தனது காதல் ஃபென்சியாவை திருமணம் செய்து கொண்டார். அதன் போட்டோக்களும், வீடியோக்களும் இணையத்தில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

குக் வித் கோமாளி புகழுக்கு கல்யாணம்!!!

திண்டிவனம் அடுத்த தீவனூர் பொய்யா மொழி விநாயகர் ஆலயத்தில் சின்னத்திரை நடிகர் புகழின் திருமணத்தில் ஏராளமானோர் கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி என்கிற புகழ். இவர் சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார். மேலும், இவர் சில திரைப்படங்களிலும் நடித்து வருவதாக கூறப்படுகின்றது.

குக் வித் கோமாளி' புகழ் திருமணம் - பிரபலங்கள் வாழ்த்து | cook with comali  fame pugazh got married today - hindutamil.in

இந்நிலையில் இன்று இவருக்கும் கோவை மாவட்டம் போந்தனூர் பகுதியைச் சேர்ந்த உமர் - பரித்தா  இவர்களின் மகள் ஃபென்சியா என்பவருக்கும் இந்து முறைப்படி  திருமணம் நடைபெற்றது. சின்னத்திரை நடிகருக்கு திருமணம் என்று கேள்விப்பட்ட  அப்பகுதியைச்  சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் இந்த திருமணத்தை நேரில் காண வருகை தந்தனர்.

மேலும் இந்த திருமணத்தில் பல்வேறு திரைப்படத்துறையினர், அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

மேலும், இன்று தான் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியைத் திருமணம் செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.