நடிகை சாராலிகானுடன் கைக்கோர்த்து போஸ் கொடுத்த நடிகர் தனுஷ்..!

களைக் கட்டிய ’அட்ரங்கி ரே’ பட புரோமஷன் நிகழ்ச்சி..!

நடிகை சாராலிகானுடன் கைக்கோர்த்து போஸ் கொடுத்த நடிகர் தனுஷ்..!

நடிகர் தனுஷ் நடித்துள்ள ''அட்ரங்கி ரே'' என்ற பாலிவுட் திரைப்படம், தமிழில் ''கலாட்டா கல்யாணம்'' என டப்பிங் செய்யப்பட்டுள்ள நிலையில், மும்பையில் நடைபெற்ற இத்திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில், நடிகர் தனுஷ் நடிகை சாராலிகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில்  தனுஷ் நடித்துள்ள பாலிவுட் படம் ’’அட்ரங்கி ரே’’. தமிழில் கலாட்டா கல்யாணம் என டப்பிங் செய்யப்பட்டுள்ள இத்திரைப்படம், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வருகிற  24-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் தனுஷ் உடன் நடிகை சாராலிகான் கைகோர்த்து  நின்று  போஸ் கொடுத்தார்.