“பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள்” - நடிகர் பாக்யராஜ் பேச்சு

பிரதமரை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள் என நடிகர் பாக்கியராஜ் பேசியுள்ளார்.

“பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள்” - நடிகர் பாக்யராஜ் பேச்சு

சென்னை தி.நகரில் பாஜக சார்பில் புதிய இந்தியா 2022 என்கிற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் நடிகர் பாக்கியராஜ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தமிழக பாஜகவுக்கு சரியான ஆளைத்தான் தலைவராக நியமித்திருக்கிறார்கள் என அண்ணாமலையை புகழ்ந்தார். மேலும், பிரதமரின் திட்டங்கள் குறித்த இந்த புத்தகத்தை பெறுவதை பாக்கியமாக கருதுவதாக கூறிய பாக்யராஜ், விமர்சனங்களை காதில் வாங்காமல் பிரதமர் பல வெளிநாடுகளுக்குச் சென்று வருவதை பார்த்து தான் வியந்து போவதாகவும் கூறினார்.

பிரதமரை குறை கூறுபவர்கள் நல்லவற்றையும் பேசமாட்டார்கள், பிறர் சொல்வதையும் கேட்க மாட்டார்கள் என்றும், பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது என்றும் நடிகர் பாக்யராஜ் கூறினார்.