நடிகர் அர்ஜுனின் தாயார் காலமானார்..!

நடிகர் அர்ஜுனின் தாயார் காலமானார்..!

நடிகர் அர்ஜூனின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்..

நடிகர் அர்ஜூன்:

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என்று அழைக்கப்படும் நடிகர் அர்ஜூன், முன்னணி ஹீரோக்களின் பட்டியலில் இன்றளவும் தன் முத்திரையை பதித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி கன்னடா, மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஆக்‌ஷன் பிளாக் பஸ்டராக அமைந்ததால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் தென்னிந்தியாவில் தனிப் பெயரைப் பெற்றவர் அர்ஜுன்.

அர்ஜூனின் தாயார் காலமானார்:

இந்நிலையில்,  நடிகர் அர்ஜூனின் தாயார் லக்ஷ்மிதேவி இன்று காலமானார். அவருக்கு வயது 85. கர்நாடக மாநிலம் மைசூரில் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்தவர். கடந்த சில காலமாக உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு ஜெயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இதனையடுத்து, சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். இவர் மூத்த கன்னட நடிகர் மறைந்த  சக்திபிரசாத்தின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.