ஆயிரத்தில் ஒருவன் பட்ஜெட்டில் குளறுபடி.. அதனாலதான் படம் வசூல் செய்யவில்லை.. புலம்பிய செல்வராகவன்

ஆயிரத்தில் ஒருவன் பட்ஜெட்டில் குளறுபடி.. அதனாலதான் படம் வசூல் செய்யவில்லை.. புலம்பிய செல்வராகவன்

செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம், காலம் கடந்து வெற்றியை கொண்டாடப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு மேல் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக போட்ட உழைப்பு அத்தனையுமே அப்போது வீணாகிவிட்டது.

ஆனால் இப்போது அந்த படத்தின் அருமையை உணர்ந்த ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். தற்போது அனைத்து திரையரங்குகளிலும் ஆயிரத்தில் ஒருவன் படம் பத்து வருடம் கழித்து மீண்டும் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனவும், அதில் சோழ இளவரசராக தனுஷ் நடிக்க உள்ளார் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் பற்றிய உண்மையை சமீபத்தில் செல்வராகவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.


ஆயிரத்தில் ஒருவன் படம் உண்மையாவே வெறும் 18 கோடியில் தயாரான படம்தானாம். ஆனால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்க வேண்டும் என்பதற்காக 32 கோடி பட்ஜெட்டில் உருவானதாக பொய் சொல்லி விட்டோம், இதனால் படம் பட்ஜெட்டை விட அதிகம் வசூல் செய்தும் தோல்வி படமாக கருதப்பட்டது எனக்கூறி புலம்பியுள்ளார். இதற்கு ரசிகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.