வாடிவாசல் படத்துக்காக வெறித்தனமாக ரெடியாகும் அமீர்.. இணையத்தில் வெளிவந்த புகைப்படம்

வாடிவாசல் படத்துக்காக வெறித்தனமாக ரெடியாகும் அமீர்.. இணையத்தில் வெளிவந்த புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா சமீப காலமாக படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அப்படி அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படமே சூரரைப்போற்று. 

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா, வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார்.

 வாடி வாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் படம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளனர். தற்போது படம் பற்றிய புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் இயக்குனர் அமீர் நடிக்க உள்ளாராம். அமீர் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.