பிரம்மாண்டமாக உருவாகியுள்ள விழா மேடை...! வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா..?

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள விழா மேடை...!  வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா..?

நடிகர் சிம்பு முன்னதாக நடித்து வெளியான திரைப்படம் மாநாடு. நீண்ட இடைவெளிக்கு பிறகு உருவான இந்த திரைப்படம் சிம்புவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அதோடு இந்த திரைப்படத்தை இயக்கிய, இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் வெற்றி படமாய் அமைந்தது. இதனை தொடர்ந்து, நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வந்தார். விண்ணை தாண்டி வருவாயா, செக்க சிவந்த வானம், அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ளது வெந்து தணிந்தது காடு திரைப்படம். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஐசரி கணேசனின் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தில், நடிகர் சிம்புவுடன் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற செப்டம்பர் 15 ம் தேதி திரையரங்குகளில் திரைப்படம் வெளியாக உள்ளது. சிம்பு, கிராமத்து தோற்றம் மற்றும் நகரத்து தோற்றம் என இரு வேறு தோற்றங்களில் நடித்திருப்பதை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். மேலும், படத்தின் டீசர் மற்றும் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில், படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாள் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் போன்றோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோட்டை வடிவில், பிரம்மாண்டமாக விழா மேடை உருவாகியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.