நல்லெண்ணையால் ஃபேமஸ் ஆன நடிகை திடீர் மரணம்..! திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல்..!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 300 படங்களில் நடித்தவர்..!

நல்லெண்ணையால் ஃபேமஸ் ஆன நடிகை திடீர் மரணம்..! திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல்..!

கே.பாலசந்தரால் 'அவள் அப்படித்தான்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை 'சித்ரா'. பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய 'சேரன் பாண்டியன்' படத்தில் சரத்குமாரின் தங்கையாக அனைவருக்கும் மிகவும் பரிட்சயமானார். தொடர்ந்து ரஜினிகாந்த் ’நடித்த ஊர்க்காவலன்’, நடிகர் பாண்டியராஜன் நடிப்பில் வெளியான ’கோபாலா கோபாலா’, பொண்டாட்டி ராஜ்ஜியம், சின்னவர் உள்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

சித்ரா தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெள்ளித்திரையிலும், தமிழில் சின்னத்திரையிலும் நடித்து வந்தார். நல்லெண்ணைய் விளம்பரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் ஃபேமஸ் அன நடிகை சித்ரா, திருமணமாகி, கணவர் மற்றும் மகளுடன் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். சினிமாவை விட்டு சற்று காலம் ஒதுங்கி இருந்த அவர், இறுதியாக ’என் சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா’ என்ற படத்தில் பிளாஷ் பேக் காட்சியில் நடித்து இருந்தார். 

இந்த நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே உயிரிழந்திருக்கிறார் நடிகை சித்ரா. சித்ராவின் மரணம் திரைத்துறையினர் மட்டுமின்றி, அவரது ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் தங்களது இரங்கல்களை சமூக வலைத்தளம் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.