ஒரே நாளில் ரிலீசாகும் ஆர்யாவின் 2 படங்கள்?

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீசாக போவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே நாளில் ரிலீசாகும் ஆர்யாவின் 2 படங்கள்?

தமிழ் திரையுலகில் பிஸியாக வலம் வருபவர்  நடிகர் ஆர்யா. இவர் நடிப்பில் உருவான ‘சார்பட்டா பரம்பரை’ படம் ஓடிடி-யில் வெளியானதை தொடர்ந்து, அவர் அடுத்ததாக நடித்துள்ள 2 படங்களும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களின் மூலம் பிரபலமான ஆனந்த் சங்கர், அடுத்ததாக இயக்கும் படம் ‘எனிமி’. இப்படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ‘எனிமி’ படம் வருகிற அக்டோபர் மாதம் 14-ந் தேதி ஆயுத பூஜை பண்டிகையையொட்டி வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. 

2-arya-movies-release-in-same-date

அதேபோல் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘அரண்மனை 3’ படமும் அதே தினத்தில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும்  கூறப்படுகிறது.