உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்த ”ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்” - எவ்வளவு கோடின்னு தெரியுமா?

'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' ஹாலிவுட் திரைப்படம், உலகம் முழுவதும் 10, 200 கோடியை தாண்டி வசூலை வாரி குவித்துள்ளது.

உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்த  ”ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்” - எவ்வளவு கோடின்னு தெரியுமா?

'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' ஹாலிவுட் திரைப்படம், உலகம் முழுவதும் 10 ஆயிரம் கோடியை தாண்டி வசூலை வாரி குவித்துள்ளது.

உலகம் முழுவதும் வெளியாகும் ஹாலிவுட் படங்களுக்கான வியாபாரமே தனி தான். அதிலும் சூப்பர் ஹீரோ படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளதால், வசூலில் பல சாதனைகளையும் அவை படைக்கின்றன.

அந்தவகையில், சமீபத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான ’ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்’ படத்தில் டாம் ஹாலந்த், ஜென்டயா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

3டி தொழில்நுட்பத்தில் வெளியான இந்தப் படம், இந்தியாவில் மட்டும் 260 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், உலகளவில் 10,200 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாகவும், படக்குழு அறிவித்துள்ளது.