திருமணம் கடந்த உறவால் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!!

திருமணம் கடந்த உறவால் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!!

நகையில், திருமணம் கடந்த உறவில் இருந்த பெண்ணை, காதலனே கொலை செய்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி சிதம்பரவீரன்காடு பகுதியைச் சேர்ந்தவர் துர்காதேவி (40). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.  

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பவனம் அழகுக் கண்டர் காட்டுப் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவருடன் துர்காதேவிக்கு பழக்கம் உண்டாகியுள்ளது. 20 வயதான அருண், சேலம் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மயக்கவியல் மருத்துவம் படித்து முடித்து விட்டு வாட்ஸ்அப் மூலம் மளிகை பொருட்களை விற்று வருகிறார். 

இந்த நிலையில் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு மளிகை பொருட்கள் வாங்கிய துர்காதேவிக்கும் அருணுக்கும் இடையே திருமணம் கடந்த உறவு ஏற்பட்டது. இதனிடையில், அருண் துர்காவிற்கு தங்க சங்கிலியை பரிசளித்துள்ளார்.

அதே போல துர்காவும் அடுத்தடுத்து பணம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 18-ம் தேதியன்று இரவு 8 மணியளவில், அருணும் துர்காவும் புஷ்பவனம் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்பொழுது, துர்கா அருணிடம் மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு பணம் தேவைப்பட்டதால் ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தனக்கு உடனடியாக 1 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் என்றும், இல்லையென்றால் கள்ளத் தொடர்பை ஊரில் பரப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளார் துர்காதேவி. 

இதனால் ஆத்திரமடைந்த அருண், காரில் இருந்து தள்ளி விட்ட துர்காதேவி மீது நான்கைந்து முறை காரை ஏற்றியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த துர்கா தேவி சம்பவ இடத்திலேயே பலியானதைத் தொடர்ந்து, காரை தாழைக்காட்டு பகுதியில் நிறுத்தி விட்டு தப்பியோடினார் அருண். 

இதுகுறித்து அறிந்த துர்காதேவியின் கணவர் சுந்தரமூர்த்தி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வேதாரண்யம் போலீசார் செல்போன் ஆதாரங்களை வைத்து தலைமறைவான அருணை கைது செய்தனர். 

கணவருக்கு தெரியாமல் வயது குறைந்த இளைஞருடன் உறவு வைத்த பெண்மணி, அவரது கையாலேயே இறந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க || ஆந்திரா போலீசாரின் மிருகத்தனமான தாக்குதலில் சிக்கி பாதிக்கப்பட்ட தமிழ் நாட்டு பழங்குடியினர்!!