லிவ்-இன் உறவு முறை: பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!

லிவ்-இன் உறவு முறை: பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!

மும்பை: மகாராஷ்டிராவின், மும்பையில் லிவ்-இன்-பார்ட்னரை கொலைசெய்து துண்டு துண்டாக்கி வேகவைத்து தூக்கி வீசப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. 

மும்பையில் உள்ள மீரா சாலை பகுதியில் உள்ள ஆகாஷ்கங்கா என்னும் கட்டடத்தில், வாடகை வீட்டில், 56 வயதான மனோஜ் என்பவரும் 32 வயதான சரஸ்வதி என்பவரும் திருமணம் பண்ணிக்கொள்ளாமல், லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். 

இவர்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து சந்தேகிக்கும் வகையில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தில் குடியிருக்கும் மக்கள், நாயாநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.  

விசாரனையில், மனோஜ், சரஸ்வதியை கொடூரமாக கொலை செய்து, மரம் வெட்ட பயன்படும், இயந்திரத்தால் சரஸ்வதியின் உடலை துண்டுத் துண்டாக வெட்டி, வெட்டிய உடற்பாகங்களை குக்கரில் வேக வைத்து, பிளாஸ்டிக் பைகளில் கட்டி வீசியுள்ளது தெரியவந்துள்ளது.

13 உடற்பாகங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய மனோஜின் மேல்  வழக்கு பதிவு செய்து, அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.