மதம் மாற மறுத்த மனைவி,.. அடித்து உதைத்த கணவர்,. பொங்கியெழுந்து காவல்நிலையத்தில் புகார்.! 

மதம் மாற மறுத்த மனைவி,.. அடித்து உதைத்த கணவர்,. பொங்கியெழுந்து காவல்நிலையத்தில் புகார்.! 

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பகுதியைச் சேர்ந்தவர் ஜபினா, இவர் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீநாத் என்பவரை கடந்த 2011ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு முஜம்மது ஷபி, அசேன் என இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், தனது கணவர் தன்னை மதம் மாற்ற முயற்சிப்பதாகவும், தன்னையும் தன் குழந்தைகளையும் குடிபோதையில் அடித்து உதைப்பதாகவும்  ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், திருமணத்துக்கு பிறகு ஸ்ரீநாத்தின் கொடுமைகள் தாங்க முடியாமல், ஜபினா பலமறை தற்கொலை முயற்சி செய்துள்ளதாகவும், பின் கணவரை பிரிந்து 2 ஆண்டுகள் தாய் வீட்டில் வசித்ததாகவும் கூறியுள்ளார். தாய் வீட்டில் இருக்கும் போது திடீரென அங்கு வந்த கணவர் தன்னையும், தன் குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக கூறியதால் கணவர் மீது புகார் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.