மது போதையில் சிகிச்சை அளித்த விவகாரம்: மருத்துவமனைக்கு சீல்!!

தென்காசியில் மது போதையில் மருத்துவம் பார்த்த பல் மருத்துவரின் தனியார் பல் மருத்துவமைனக்கு சுகாதார துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் ராமதங்கராஜன் என்பவரின் புன்னகை பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் இவரிடம் பல் பிடுங்குவதற்காக கீழ்கடையம் பகுதியை சேர்ந்த செல்வன் என்பவர் சென்றுள்ளார்.

அப்போது மருத்துவர் அந்த இளைஞருக்கு மது போதையில் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர், மது அருந்திவிட்டு சிகிச்சை அளிக்கலாமா 
என்று கேட்டு உள்ளார். இதனால் சிறிது நேரத்தில் அந்த இளைஞரிடம் மது அருந்தியதை ஒப்பு கொண்ட மருத்துவர், அது ஒன்றும் பிரச்சனை இல்லை 5 நிமிடத்தில் சிகிச்சையை முடித்து விடலாம் என்றும் மருத்துவர் சிகிச்சை பார்ப்பதிலேயே குறியாக  இருந்துள்ளார்.

இந்த சம்பவத்தை அந்த நோயாளி வீடியோவாக பதிவு செய்த நிலையில் அந்த வீடியோவை சமூக வளைதலங்களில்  வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இந்த நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உத்தரவின்படி தென்காசி கேட்டாசியர் லாவண்யா, மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா, மாவட்ட தேசிய சுகாதார குழும ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் கார்த்திக் அறிவுடைநம்பி, வட்டார மருத்துவ அலுவலர் பழனிக்குமார், மேற்பார்வையாளர் ஆனந்தன் தலைமையிலான வருவாய் மற்றும் சுகாதார துறையினர் கடையத்தில் செயல்பட்டு வந்த  புன்னகை பல் மருத்துவமனைக்கு சீல் வைத்து பூட்டினர். 

அதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு துறை ரீதியான சில அனுமதியும் பெறவில்லை என்பதும் விசரனையில்  தெரிய வந்துள்ளது. மேலும் மருத்துவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.