குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கூட்டத்தில், அதிகாரிகளுக்கு டீ எடுத்து வந்த 10 வயது குழந்தை தொழிலாளி!!

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் குழந்தைகள் உரிமை சார்ந்த பிரச்னைகள் குறித்து அதிகாரிகள் ஆலாசனையின்போது 10 வயது சிறுவன் அவர்களுக்கு தேநீர் வழங்க கேனுடன் சென்ற சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.

பெரம்பலூரில் வரும் 11 - ம் தேதி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் குழுவினர்  பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் முகாம் நடத்த உள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களோடு ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் நடைபெற்றது 

இந்த முகாமில் அரசியலமைப்பில் உள்ள பல்வேறு சட்டங்கள் மற்றும் சட்டங்களின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளை அனைத்து குழந்தைகளும் அனுபவிக்க வேண்டும் என்பதை மையமாக கொண்டு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இயங்குகிறது 

எனவே இந்த முகாமில் குழந்தைகள் அவர்களின் பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் தொடர்பாக பணிபுரியும் பங்கேற்பாளர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு குழந்தைகளை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துதல் அல்லது வீட்டு வேலைக்கு பயன்படுத்துதல், மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களை திருப்பி அனுப்புவதில் தாமதம், குழந்தைகள் ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருத்தல், குழந்தைகள் பெற்றோருடன் தெருவோரங்களில் பிச்சையெடுத்தல், குழந்தைகளை கட்டாயப்படுத்தி பிச்சையெடுக்க வைத்தல் போன்ற  பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக இந்த முகாமில் குழந்தை உரிமைகள் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாக புகார் தெரிவிக்கலாம் மாவட்ட ஆட்சியர் கற்பகம் கூறினார் 

இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கு டீ கொடுக்க டீ கேனுடன் 10 வயது சிறுவன் ஒருவன் ஒரு பெரியவரோடு கூட்ட அரங்கம் எங்கு என்று தெரியாமல் அங்குமிங்கும் நடந்து ஒரு வழியாக  ஆலோசனை கூட்டம்  நடைபெறும் இடத்திற்கு சென்று டீ கேனுடன் காத்து நின்றான்

உள்ளே குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் குழந்தைகள் உரிமை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் ஆனால் வெளியே குழந்தை தொழிலாளி சிறுவன் டி கேனுடன்  காத்திருந்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.