காதலனுடன் பெட்ரூமில் ஷகிதா... திடீரென வந்த கணவன்!! துண்டு துண்டாக வெட்டி, எரித்து புதைத்த கொடூரம்...

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்று சமயலறையில் புதைத்துவிட்டு வேலைக்கு சென்ற கணவன் காணவில்லை போலீசில் புகார் கொடுத்துள்ளார் மனைவி.  

காதலனுடன் பெட்ரூமில் ஷகிதா... திடீரென வந்த கணவன்!! துண்டு துண்டாக வெட்டி, எரித்து புதைத்த கொடூரம்...

மும்பையில் வசித்து வரும் பெண் ஒருவர் தன் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரை கொடூரமாக கொண்டு கொலை செய்து வீட்டில் புதைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ரயீஸ் ஷேக் என்பவருக்கு ஷகிதா என்ற பெண்ணுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. பிழைப்புக்காக வந்து மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்த தம்பதிக்கு 6 வயதில் மகளும், 2 வயதில் மகனும் உள்ளனர். 

இந்நிலையில் ஷகிதா கடந்த மே 25-ம் தேதி தாஹிசர் பகுதி போலீஸ் ஸ்டேஷனில் வேலைக்கு சென்ற தனது கணவரை காணவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் இருந்து மும்பை வந்த அண்ணனை தேடி வந்த ரயீஸ் தம்பிக்கு அனிஸ் தனது அண்ணியிடம் விசாரித்துள்ளார். அவர் முன்னுக்கு பின் முரணாக சொல்லிய தகவல்கள் அவருக்கு திருப்தியில்லை. இதனையடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற ரயீஸின் தம்பி "அண்ணி மாறி மாறி பேசுகிறார்" என போலீசில் கூறியுள்ளார். இதனையடுத்து அந்தப்பெண்ணின் வீட்டிற்கு விசாரணைக்கு சென்ற போலீசார். அவரது வீட்டை சோதனை செய்துள்ளனர். அப்போது சமையலறையில் இருந்த டைல்ஸ்கள் ஒழுங்கான வரிசையில் இல்லை, சில டைல்களை அங்கு காணவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்துள்ளனர். தன் உல்லாசத்துக்கு தடையாக இருந்ததால் தனது காதலனுடன் சேர்ந்து கணவனை துண்டு துண்டாக வெட்டி உடலை எரித்து அதனை புதைத்து விட்டதாககொன்றுவிட்டதாக கூறியுள்ளார்.  

இதுகுறித்து நடத்திய விசாரணையில்,“ஷகிதாவுக்கு அதேபகுதியைச் விஷவா என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விபரம் கணவன் ரயீஸ்-க்கு தெரியவர அவரை கண்டித்துள்ளார். ஆனாலும் இவர்கள் உறவு நீடித்து வந்துள்ளது. திடீரென ஒருநாள் தனது காதலனுடன் பகல் நேரத்திலேயே உல்லாசமாக இருந்துள்ளார். வேலைக்கு சென்ற கணவன் திடீரென வீட்டிற்கு வர, இருவரும் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த அவர் இருவரையும் திட்ட, கோபமடைந்த ஷகிதா மற்றும் காதலன் சேர்ந்து ரயீஸை நைலான் கயிற்றைக் கொண்டு ரயீஸை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டில் உள்ள பாத்ரூமில் வைத்து ரயீஸின் உடலை 3 துண்டுகளாக வெட்டியுள்ளனர். குழந்தைகள் தூங்கியவுடன் உடலை சமையலறையில் எரித்துள்ளனர். பின் உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவரில் போட்டு வீட்டின் உள்ளே புதைத்துள்ளனர். ஆனால் மீண்டும் டைல்ஸை சரியாக பொறுத்தாததால் சிக்கிக்கொண்டனர்.  இந்த கொடூர சம்பவங்கள் குழந்தையின் கண் முன்னே நிகழ்ந்துள்ளது. வெளியே சொன்னால் உனக்கும் இதே கதிதான் என்று பெற்ற குழந்தையை மிரட்டியுள்ளார். 

இதனையடுத்து விசாரணைக்கு பின்  அந்த தரையை பெயர்த்தபோது பெரிய ஓட்டை ஒன்று இருந்தது. இதனையடுத்து சடலத்தை மீட்டுள்ளனர்.