வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை.. கூடுதல் வரதட்சணை ரூ.5 லட்சம் கேட்டு கொடுமை!!

ஆந்திர மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் மென் பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை.. கூடுதல் வரதட்சணை ரூ.5 லட்சம் கேட்டு கொடுமை!!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் பகுதியைச் சேர்ந்தவர் பார்க்கவ். இவருக்கும் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த நிர்மலாவிற்கு கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.

கணவன் மனைவி இருவரும் மென்பொறியாளராக பணிபுரிந்து வரும் நிலையில் பார்க்கவ், கூடுதல் வரதட்சணையாக 5 லட்சம் ரூபாய் கேட்டு நிர்மலாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இதையடுத்து நிர்மலாவின் பெற்றோர் ரூபாய் 2 லட்சத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர். ஆனால் மீதமுள்ள 3 லட்ச ரூபாயை கொண்டு வர வேண்டுமென கொடுமைப்படுத்திய நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் நிர்மலா தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிர்மலாவை கொலைசெய்து தற்கொலை என கணவன் திசை திருப்புவதாக உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.