வேங்கை வயல் விவகாரம்; 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ சோதனை!

வேங்கை வயல் விவகாரம்; 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ சோதனை!

வேங்கை வயல் குடிநீர்த் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டது  தொடா்பாக 4 சிறுவர்களுக்கு இன்று டி என் ஏ பாிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டது. இச்சம்பவம் தமிழ்நாடு எங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிந்த காவல்நிலைய விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியமைக்கப்பட்டது. இச்சம்பவத்தில்  விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அப்பகுதியில் உள்ள நபர்களின் டிஎன்ஏ மாதிரிகளை எடுத்து குடிநீர்த் தொட்டியில் கலக்கப்பட்ட மாதிரிகளுடன் ஒப்பிட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.  

இது தொடர்பாக இதுவரை 21 பேரிடம் டி என் ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேங்கைவயலை சேர்ந்த ஒரு சிறுவன், இறையூர் பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் என 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனைக்காக இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதையும் படிக்க:முன்னாள் அமைச்சர் மீது அதிமுகவினர் புகார் மனு..!