அங்கீகரிக்கப்படாத சிம் கார்டுகள்... விதிகளை மீறினால் 10 லட்சம் அபராதம்!!

அங்கீகரிக்கப்படாத சிம் கார்டுகள்... விதிகளை மீறினால் 10 லட்சம் அபராதம்!!

விதிகளை மீறும் தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அங்கீகரிக்கப்படாத வியாபாரிகள் மூலம் சிம் காா்டு விற்பனை செய்யும் தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தொலைத்தொடா்பு துறை தொிவித்துள்ளது. 

சிம் காா்டு இணைப்பை மையமாகக் கொண்டு நடைபெறும் பல்வேறு மோசடிகளை கட்டுப்படுத்த மத்திய அரசு வகுத்துள்ள புதிய விதிகள் அக்டோபா் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அதன்படி தொலைத்தொடா்பு நிறுவனங்கள் அனைத்து சிம்காா்டு விற்பனை நிலையங்களையும் வரும் 30-ம் தேதிக்குள் அரசிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தொிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய விதிகள் அமலுக்கு வந்த பின் பதிவு செய்யப்படாத வியாபாரிகள் மூலம் சிம்-காா்டு விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தொிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க || I.N. D.I.A. கூட்டணியின் இலச்சினை இன்று வெளியீடு!!