கோயில் கோபுர கலசங்கள், பூஜை பொருட்கள் திருட்டு... 4 மணி நேரத்தில் வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்...

ஸ்ரீ தேசமாரியம்மன் ஆலயத்தில்   5 கலசங்கள் மற்றும் கோவில் நிர்வாகி வீட்டில் நடராஜர் சிலை, தங்க நகை பூஜை பொருட்கள்  கொள்ளையடித்து சென்ற இளைஞரை 4 மணிநேரத்தில் போலீசார் பிடித்தனர். 

கோயில் கோபுர கலசங்கள், பூஜை பொருட்கள் திருட்டு... 4 மணி நேரத்தில் வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்...

வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் 4 வது தெரு அமைந்துள்ள ஸ்ரீ தேசமாரியம்மன் கோயில் நுழைவாயிலில் உள்ள கோபுரத்தில் பொருத்தப்பட்டு இருந்த 5 கலசங்கள் கொள்ளை போனது பின்னர் அதே ஆலயத்தின் நிர்வாகியான மனோகரன் வீட்டில் புகுந்து 1 நடராஜர் சிலை, 1 சவரன் தங்க மோதிரம்   மற்றும்  பூஜை பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகி மனோகரன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி.  சுரேஷ் பாண்டியன் உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமையிலான குற்றப் பிரிவு போலீசார் 4 மணி நேரத்தில்  திருடி சென்ற மர்ம நபர் குறித்து துப்பு துலக்கி  கலசங்கள் மற்றும் நடராஜர் சிலை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற  மில்லத் நகர் பகுதியை சேர்ந்த நஜீம் என்ற இளைஞரை பெருமாள் பேட்டை கூட்டு  சாலையில் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கோவில் கலசங்கள் மற்றும் நடராஜர் சிலை ஆகியவற்றை திருடி பழைய இரும்பு கடையில் விற்பனை செய்ததை ஒப்பு கொண்டார்.

பின்னர் அவர் கொள்ளையடித்து சென்ற 5 கலசங்கள், நடராஜர் சிலை,தங்க மோதிரம்,பூஜை பொருட்களை பறிமுதல் செய்து அந்த இளைஞர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகார் அளித்த 4 மணி நேரத்தில் திருடுடனை சுற்றி வளைத்து கைது செய்து பொருட்களை மீட்ட போலிசார்க்கு கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.