கள்ளக்காதலனின் மனைவி உள்பட 5 பேரை கழுத்தறுத்து கொலை செய்த கள்ளக்காதலி!! நடந்தது என்ன?

கள்ளக்காதலனின் மனைவி உள்பட 5 பேரை கழுத்தறுத்து கொலை செய்த கள்ளக்காதலி!! நடந்தது என்ன?

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கள்ளக்காதலனின் மனைவி உட்பட 5 பேரை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். 

மாண்டியா மாவட்டம் கிருஷ்ணராஜ சாகர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கங்காராம் - லட்சுமி தம்பதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் கங்காராம் வேலைக்கு சென்றிருந்த நிலையில், அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், லட்சுமி, அவருடைய 3 பிள்ளைகள் மற்றும் லட்சுமியின் அண்ணன் மகன் உள்ளிட்ட 5 பேரை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். 

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து, நகைக்காக கொலை நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக, பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர், கங்காராமின் கள்ளக்காதலி என்பதும், அவரது பெயரும் லட்சுமி என்பதும் தெரியவந்தது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், அனைவரையும் கூலிப்படையை வைத்து கொலை செய்ததும் அம்பலமானது. மேலும், தலைமறைவாகியுள்ள கூலிப்படையை சேர்ந்த இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.