காதலர்களிடம் பணம் பறித்த காவலர்கள் பணியிடை நீக்கம்!

காதலர்களிடம் பணம் பறித்த காவலர்கள் பணியிடை நீக்கம்!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காதலர்களை மிரட்டி பணம் பறித்த இரு காவலர்கள் சஸ்பென்ட்  செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கானத்தூர் காவல் நிலையம் இயங்கி வருகிறது. பொதுவாக காலை முதல் இரவு வரை கிழக்கு கடற்கரை சாலை காதலர்களின் பொழுதுபோக்கு பூங்காவாக திகழ்ந்து வருகிறது. 

வழக்கமாக காதலர்கள் இருள் சூழ்ந்த நேரத்தில் கடற்கரையில் அமர்ந்து மனம்விட்டு பேசி வருவதும், சிலர் கடற்கரைக்கு வரும் மக்களின் முகம் சுழிக்கும் வகையில் அநாகரிகமாக நடந்து கொள்வதும் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வருவது வழக்கமான ஒன்றுதான். 

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மாலை ரோந்து பணியில் இருந்த கானத்தூர் போலீசார் 2016-ம் ஆண்டு பணியில் சேர்ந்த மணவாளன், 2017-ம் ஆண்டு பணியில் சேர்ந்த கணேஷ் இருவரும் பனையூர் கடற்கரையில் இருந்த காதலர்களை மிரட்டி பணம் பறித்ததாக புகார் எழுந்துள்ளது. 

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பள்ளிக்கரணை காவல் மாவட்ட துணை ஆணையர் தீபா சத்தியன், கடற்கரையில் காதலர்களை மிரட்டி பணம் பறித்தது உறுதி ஆனதால் காவலர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். 

காதலர்களை மிரட்டி பணம் பறித்தது சம்மந்தமாக கொஞ்சமும் பாரபட்சம் காட்டாமல் இருவரையும் சஸ்பென்ட் செய்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பீதியை ஏற்படுத்தியது. 

இதையும் படிக்க: அரசு பள்ளி மாணவி முதல்,... ஆதித்யாவின் திட்ட இயக்குநர் வரை..! மீண்டும் ஒரு தமிழக விஞ்ஞானி..!