பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மீது பாலியல் புகார்: பாதிக்கப்பட்ட 5 மாணவிகளிடம் நேரடி விசாரணை...

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மீது தொடரப்பட்டுள்ள பாலியல் வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளிடத்தில் இன்று நேரடியாக விசாரணை நடைபெற உள்ளது. 

பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மீது பாலியல் புகார்: பாதிக்கப்பட்ட 5 மாணவிகளிடம் நேரடி விசாரணை...

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ் துறை தலைவர் பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது முதலாம் ஆண்டு முதுகலை மாணவிகள் சிலர், கல்லூரி முதல்வரிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் பால் சந்திரமோகன் மாணவிகள்  பாடம் நடத்தும்போது நெருக்கமாக அமர்ந்து கொள்வது, பாலியல் சீண்டல்கள் மற்றும் அவரது அறைக்கு தனியாக வரச்சொல்லி வற்புறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த செயல்களுக்கு பேராசிரியர் நளினி துணை போவதாகவும் கடிதத்தில் மாணவிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் வழக்கறிஞர் ஜெயந்தி ராணி தலைமையில், துணை முதல்வர் உள்ளிட்டோர் அடங்கிய  குழு அமைத்து விசாரணை நடத்தியது.

இந்த குழு மாணவிகளிடமும், கல்லுாரி பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை நிர்வாகத்திடம் தாக்கல் செய்துள்ளது. மேலும் இதுகுறித்து தொலைபேசியின் வாயிலாக மாணவிகளிடம் விசாரணை நடத்தியதில் பால் சந்திரமோகன் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டது உண்மை என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இன்று ஐந்து மாணவிகளிடம் நேரடியாக விசாரணை மேற்கொள்ள குழு முடிவு செய்துள்ளது.