பள்ளி மாணவன் கத்தியால் குத்தி கொலை!

கடலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

கடலூர் மாவட்டம், திருமுட்டம் அருகே பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்ற ஜீவா என்ற மாணவன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பேருந்து நிலையத்தில் நடந்த வாக்கு வாதத்தின் போது புளியங்குடியை சேர்ந்த நபர் மாணவன் ஜீவாவை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. 

தகவல் அறிந்த திருமுட்டம போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவனின் உடலை கைப்பற்றினர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த ஜீவாவின் உடல் விருதாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.  

புளியங்குடியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவருக்கும் 12 ஆம் வகுப்பு படித்துவரும் ஜீவாவிற்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகவும் இதனால் இந்த படுகொலை நிகழ்ந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

இதையும் படிக்க: பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியானது...!