130 பெண்களை கொடூர கொலை செய்த ரியல் ராட்சசன்... ஒளித்து வைத்திருந்த காதணிகள் மூலம் அம்பலம் 

சமீபத்தில் வெளியான சைக்கோ படத்தில் வில்லன் பெண்களை கடத்தி சென்று அவர்களின் தலையை வெட்டி அதில் மகிழ்ச்சி அடைவான். அதே போன்று நிஜ வாழ்க்கையில் ஒரு சைக்கோ உலா வந்துள்ளார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா..? 

130 பெண்களை கொடூர கொலை செய்த ரியல் ராட்சசன்... ஒளித்து வைத்திருந்த காதணிகள் மூலம் அம்பலம் 

பெண்களைக் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து, சுத்தியலால் அடித்து அவர்கள் துடிப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைவான். இது மட்டும் இல்லாமல், உயிர் பிரியும் நேரத்திற்கு சற்று முன்பு அடிப்பதை நிறுத்தி விடுவான். சற்று நேரத்தில் நினைவு திரும்பும் போது, மீண்டும் கொடூரமாக அடித்து சித்ரவதை செய்வான். அதன்பின் பாதிக்கப்பட்டவரின் காது ஆபரணங்களைப் பறித்து வீட்டில் மறைத்து வைத்துக் கொள்வான்.

இவ்வாறு பல பெண்களை சித்திரவதை செய்து கொன்ற ராட்சசன் அமெரிக்காவில் 'தி டேட்டிங் கேம் கில்லர்' என்று பெயர் வாங்கிய 77 வயதான ரோட்னி ஜேம்ஸ் அல்காலா காலமாகியுள்ளான். மரண தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு எதிர்பார்த்திருந்த நிலையில், கலிபோர்னியாவில் உள்ள கொர்கோரன் சிறையில் இயற்கையாக மரணம் எய்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 7 பெண்களின் கொலை வழக்கில் அவன் மீது குற்றம் நிரூபணம் ஆனது. ஆனால் உண்மையில் அவன் கையால் 130 பேருக்கு மேலாக பெண்கள் கொலைக்கு ஆளானதாக அதிகாரிகள் நம்புகின்றனர். 1968 ல் எட்டு வயது சிறுமியின் மீதும் 1974இல் 13 வயது சிறுமி மீதும் பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்தான்.

1978இல் 'த டேட்டிங் கேம்' டிவி ஷோவில் போட்டியில் பங்கு பெற்றான். பெண்களின் மீது கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு போட்டோ எடுத்து வைக்கும் பழக்கம் உள்ளது அவனுக்கு. அந்த டிவி ஷோவில் தன்னை போட்டோகிராபராக அறிமுகம் செய்து கொண்டான். அதில் வெற்றியும் பெற்றான். இந்த ஷோவால் அவனுக்கு தி டேட்டிங் கேம் கில்லர் என்று பட்டப் பெயர் வந்தது. 1979 இல் ராபின் ஸாம்ஸே என்ற 12 வயது சிறுமியை கொலை செய்த குற்றத்துக்காக அல்காலாவுக்கு 1980ல் மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து தண்டனை ரத்தானது.

2010ல் டிஎன்ஏ பரீட்சை மூலம் அவன் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதால் மரண தண்டனை மீண்டும் விதிக்கப்பட்டது. அதே ஆண்டு மற்றும் நான்கு பெண்களின் கொலை வழக்கில் மரண தண்டனை நிரூபிக்கப்பட்டது. 2013இல் மற்றும் இரண்டு பெண்களின் கொலை வழக்கு நிரூபனம் ஆனதால் 25 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அல்காலா ஒளித்து வைத்திருந்த பாதிக்கப்பட்ட பெண்களின் காதணிகள் அவனுடைய குற்றங்களை நிரூபிக்க உதவியதில் முக்கிய பங்கு வகித்தன. அவனுடைய வீட்டில் இருந்த நூற்றுக்கும் மேலான பெண்களின் போட்டோக்களை போலீசார் ஊடகங்களில் வெளியிட்டனர். அதில் பலரை தற்போது காணவில்லை.