பணியாளர்களிடம் 100ரூ பெற்று, ஜேசிபி மூலம் பண்ணை குட்டை அமைக்கும் ஊராட்சி தலைவர்கள்!!

பணியாளர்களிடம் 100ரூ பெற்று, ஜேசிபி மூலம் பண்ணை குட்டை அமைக்கும் ஊராட்சி தலைவர்கள்!!

திருப்பத்தூரில், ஊராட்சி நிர்வாகம், பண்ணைகுட்டை அமைக்கும் பணிகளில்,  மகாத்மா ஊர்கள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாளர்களை நியமிக்காமல், ஜேசிபி-க்களை வைத்து பண்ணை குட்டை அமைத்து வருகிறது. 

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும்  ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 1400 பண்ணைகுட்டை அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பூமி பூஜை போட்டு  சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைக்கப்படும் பண்ணை குட்டைகளை அமைக்கப்பட்டு வருகிறது. மகாத்மா ஊர்கள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி புரியும் பணியாளர்களை வைத்து மட்டுமே இந்த பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல், 100 நாள் வேலை செய்யும் பணியாளர்களிடம், 100 ரூபாய் வசூல் செய்து, ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பண்ணை குட்டை அமைக்கும் பணிகள், ஆதியூர் ஊராட்சி மன்ற தலைவர் சைனம்மாள் சுப்பிரமணி  தலைமையில் நடைபெற்று வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை நாட்களில் இப்பணி நடைபெறக் கூடாது. இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை நாட்களிலும் ஜே சி பி இயந்திரத்தை வைத்து பண்ணை குட்டை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இதே போல் பல்வேறு பகுதிகளிலும் பண்ணை குட்டை அமைக்கும் பணிகளை பணியாளர்களை வைத்து நடத்தாமல், ஜேசிபி இயந்திரத்தை வைத்து நடத்தி வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் பணியாளர்களிடம் 100 ரூபாய் வசூல் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க || மாநில அளவிலான சைக்கிளிங் போட்டியில் கோவை முதலிடம்!