வங்கிப்பணத்தை கையாடல் செய்த அதிகாரி... சஸ்பென்ட் ஆனதால் மனமுடைந்து தற்கொலை...

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் நிலவள வங்கியில் நகைக் கடன் வழங்குவதில் ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலவள வங்கி செயலாளர் நீலகண்டன் கீரனூரில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வங்கிப்பணத்தை கையாடல் செய்த அதிகாரி... சஸ்பென்ட் ஆனதால் மனமுடைந்து தற்கொலை...

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் நிலவள வங்கியில் 30 வருடமாக பணியாற்றி வருகிறார் நீலகண்டன். தற்போது அவர் செயலாளராக பதவி வகித்து வந்தார். மேற்கண்ட வங்கியில் புதுக்கோட்டை மாவட்டம் கீழையூர் சேர்ந்த சக்திவேல், கீரனூரை சேர்ந்த வங்கி சூப்பர்வைசர் கனகவேல் மற்றும் செயலாளரான நீலகண்டன் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் மூன்று பேரும் சேர்ந்து ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் நகை கடன் வழங்குவதில் கையாடல் செய்ததாக கடந்த 10 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரால் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் மூன்று நபர்களும் பணத்தை திருப்பி கட்டியுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை  வீட்டில் இருந்து வெளியே சென்ற நீலகண்டன் வீட்டின் கழிவறையில் தூக்கு மாட்டி இறந்துள்ளார்.

வீட்டில் உள்ளவர்கள் காலையில் எழுந்து அவரை தேடும் பொழுது கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கீரனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் நீலகண்டனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கு சம்பந்தமாக நாளை விசாரணைக் கமிஷன் நடைபெறவுள்ள நிலையில், நீலகண்டன் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நீலகண்டனுக்கு மனைவு, ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.