புதுச்சேரி | ரெயின்போ நகரை சேர்ந்தவர் அருண் (24), கட்ட வடிவமைப்பாளரான இவர் கடந்த 24 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் தனது விலை உயர்ந்த கே.டி.எம் இருசக்கர வாகனத்தை தனது வீட்டின் வாசலில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றுவிட்டு பின்னர் மீண்டும் இரவு 9 மணிக்கு வந்து பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தனது இருசக்கர வாகனம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக பெரியகடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்
அப்போது புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள மருந்து கடை ஊழியரின் ஸ்பெலண்டர் இருசக்கர வாகனத்தை கடந்த 18 ஆம் தேதி திருடி சென்ற அதே நபர் தான் அருண்னின் இருசக்கர வாகனத்தையும் திருடி சென்றது தெரியவந்ததை அடுத்து இரண்டு சிசிடிவி காட்சிகளில் பதிவான வாலிபரின் உருவத்தை கொண்டு போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
மேலும் படிக்க | “ஐயா... என் ரோட்-டை காணும்” - வடிவேலு பட பாணியில் காணாமல் போன சாலை...
இந்த நிலையில் நேற்று விடியற் காலை 45 அடி சாலையில் பெரிய கடை போலீசார் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் தாங்கள் தேடி கொண்டிருக்கும் விலை உயர்ந்த இருசக்கர வாகன திருடன் என தெரியவந்ததை அடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தnar.
aதில் அவர் ரோட்டியார்பேட் பகுதியை சேர்ந்த அப்துல் காதர் (20) என்பதும் இவர் வேலை இல்லாமல் நகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் சிறுசிறு திருட்டும், அதே போல் இருசக்கர வாகனம் திருட்டிலும் ஈடுப்பட்டது தெரியவந்ததை அடுத்து அவர் திருடிய ரூ.2.5 லட்சம் மதிப்பிளான மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், அப்துல் காதரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க | இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 16.80 கோடி பேரின் ரகசிய தகவல்கள்....!!