10க்கும் மேல் போலி ஐடி... 80க்கும் மேல் வீடியோக்கள்... ஆசையினால் மோசடியாளர்களிடம் சிக்கித் தவிக்கும் ஆண்கள்...

சமூக வலைதளங்களில் இளம்பெண்கள் பெயரில் போலி கணக்குகளை  உருவாக்கி ஆண்களை காதல் வலையில் விழவைத்து மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரித்ததில் அதிர்ச்சிதரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

10க்கும் மேல் போலி ஐடி... 80க்கும் மேல் வீடியோக்கள்... ஆசையினால் மோசடியாளர்களிடம் சிக்கித் தவிக்கும் ஆண்கள்...

மும்பையை சேர்ந்த ஒரு கும்பல் பேஸ்புக். இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பெண்கள் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கியுள்ளனர். அந்த ஐடி மூலம் ஆண்களுக்கு ஃப்ரண்ட் ரிக்வஸ்ட் அனுப்பியுள்ளனர். அந்த ரிக்வெஸ்ட்டை ஏற்றுக் கொண்டால் அவ்வளவுதான். அத்துடன் அவர்கள் கதை முடிந்தது. ரிக்வஸ்ட்டை ஏற்றுக் கொள்ளும் ஆண்களிடம் நட்பாக பேசுவதில் ஆரம்பிக்கிறது இவர்களது மோசடி. நட்பாக பேசி, பின்னர் அவர்களை தங்களது காதல் வலையில் விழவைப்பர். தனக்கு விரித்த வலையை பற்றி அறியாத அப்பாவி ஆண்கள், முழுவதுமாக நம்பி  அவர்கள் என்ன சொன்னாலும் செய்யும் நிலைக்கு வந்து விடுகின்றனர்.

 ஆசை வார்த்தைகளை பேசி சபலத்தில் சிக்குவோரை கேமரா முன்பு வரவைத்து ஆபாசச் செயலில் ஈடுபட வைத்து, அந்தக்காட்சிகளை வீடியோவாக எடுத்து அதை வைத்து மிரட்டுவதுதான் இந்தக் கும்பலின் வேலை.

அந்த ஆபாச வீடியோக்களை காட்டி பணம் பறிக்கும்  வேலைகளில் இறங்கிவிடுகிறது இந்தக் கும்பல். அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுக்காவிட்டால் சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவோம் என மிரட்டப்படுகிறார்கள். மானம் போகுமே என்ற பயத்தில்  மிரட்டல் கும்பலுக்கு அடிபணிந்து தங்கள் பணத்தை இழக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.

சமூக வலைதளங்களில் 10க்கும் மேற்பட்ட போலி கணக்குகளை உருவாக்கியுள்ள இந்தக் கும்பல் இதற்காக 6 மெயில் ஐடிக்களை பயன்படுத்தியுள்ளனர். 80க்கும் மேற்பட்ட வீடியோக்களை, 250க்கும் மேற்பட்டோருக்கு விற்பனை செய்து காசு பார்த்துள்ளது இந்த கும்பல்.

பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் கொடுத்ததையடுத்து போலீசார் விசாரணையை தொடங்கியதை அறிந்த அவர்கள் பயன்படுத்திவந்த குரூப்பை முடக்கிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிம்ட விசாரித்ததில், பெரிய புள்ளிகளின் முக்கிய ஆவணங்கள் இவர்களிடம் இருக்கலாம் என்று தெரிகிறது.