தற்கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது...!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் செல்போன் டவர் மீது தற்கொலை மிரட்டல் விடுத்த  நபரை போலீசார் கைது செய்தனர்.  

போதைப் பழக்கத்திற்கு ஆளான ஷகீல் அஹம்மது என்கிற பாபு,  திருவிக நகரில் வசிக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்த பாப்கார்ன் வியாபாரி அப்ரான்கானிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தியுள்ளார். அப்ரான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷகீல் அஹமதுவை தேடி வந்தனர்.  

இதையும் படிக்க : ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 5-வது நாளாக சோதனை...!

இந்நிலையில், பேரணாம்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக அச்சுறுத்தியுள்ளார்.  சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை  கீழே இறக்கி பாப்கார்ன் வியாபாரியை கைது செய்தனர்.