கொடநாடு வழக்கு - ஊட்டி நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை, ஊட்டி நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

கொடநாடு வழக்கு - ஊட்டி நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை, ஊட்டி நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

கோத்தகிரி அடுத்த கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக, சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மனோஜை தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ள நிலையில், மறு விசாரணைக்கு பின்பு கொடநாடு வழக்கு சூடுபிடிக்க தொடங்கியது. ஊட்டியிலேயே முகாமிட்டிருந்த மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

மேலும் எஸ்டேட்டில் வேலை பார்த்த நபர்கள் மற்றும் அவர்களது வீடுகளுக்கு சென்று விசாரித்தார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளை வைத்து சில ஆதாரங்களை திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. போலீசாருக்கு வழங்கிய கால அவகாசம் முடிவடைந்த நிலையில், ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று கொடநாடு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.