ஆருத்ரா மோசடி; ஆர்.கே.சுரேஷை பிடிக்க இன்டர்போல் தீவிரம்! 

பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளில் தலைமறைவாக இருக்கும் ஆருத்ரா, ஹிஜாவு, ஐ எஃப் எஸ் நிர்வாகிகளை பிடிக்க இன்டர்போல் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

துபாயில் பதுங்கி இருக்கும் ஆருத்ரா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக நிர்வாகியும், நடிகர் ஆர் கே சுரேஷ், நிர்வாகிகள் ராஜசேகர், மகாலட்சுமி , அலெக்சாண்டர் லட்சுமி நாராயணன், வேத நாராயணன் ஜனார்த்தனன் உள்ளிட்டவர்கள் என மூன்று முக்கிய வழக்குகளில் தலைமறைவாக இருக்கும் நபர்களை கைது செய்ய வேண்டிய  குறித்து விசாரணை அறிக்கையை அந்நாட்டு அரசிடம் இன்டர்போல் அதிகாரிகள் சமர்பித்து அடுத்த கட்ட தீவிர நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.

எம்லாட் எனப்படும் சட்ட சமரச ஒப்பந்த அடிப்படையில் துபாயில் தலைமறைவாக இருக்கும் நபர்களை, முதற்கட்டமாக வழக்கின் விபரங்கள் மட்டும் தெரிவித்து பிடிக்க உதவுமாறு கேட்கப்பட்ட நிலையில் விரைந்து கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்வதற்காக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வலியுறுத்தியதன் அடிப்படையில் இன்டர் போல் அதிகாரிகள் விரைந்து கைது செய்ய தேவையான ஆவணங்களை சமர்பிக்க உள்ளது. துபாய் நாட்டு அரசிடம் சமர்ப்பித்த பிறகு இன்டர் போல் அதிகாரிகள் துபாய்க்கு விரைந்து கைது நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: "கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்" மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!