அரசு அலுவலக கோப்புகளை வீட்டில் வைத்திருந்த இடைத்தரகர்... சி.பி.ஐ. விசாரணை கோரும் பொதுமக்கள்...

அரசு அலுவலகங்களில் இருக்க வேண்டிய அரசுக் கோப்புகளை தனது சொந்த வீட்டில் வைத்திருந்த இடைத்தரகரால் வேடசந்தூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு அலுவலக கோப்புகளை வீட்டில் வைத்திருந்த இடைத்தரகர்... சி.பி.ஐ. விசாரணை கோரும் பொதுமக்கள்...

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சித்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லமநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில்  மணிகண்டன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பில்லி சூனியம் மந்திரங்கள் செய்து வந்ததாகவும், இவர் செய்யும் காரியத்தினால் ஊர் பொதுமக்களுக்கு  இடையூறு ஏற்படுவதாக கருதி அடிக்கடி பொதுமக்களிடம் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் மணிகண்டன் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு இடைத்தரகராகவும் பணி செய்து வந்ததாக கூறப்படுகிறது. பிறப்புச் சான்றிதழ் இறப்புச் சான்றிதழ் பட்டா சிட்டா நகல் போன்றவற்றை சுகமாக அரசு அதிகாரிகளிடம் கையொப்பம் வாங்கித் தருகிறேன் என்று கூறி பல முக்கிய ஆவணங்களை வாங்கி வைத்துக் கொண்டு தர மறுப்பதாகவும் இதனால் ஆவணங்களை  பெற முடியாமல் சுற்றுப்பகுதி மக்கள் அவரின் வீட்டின் முன்பு  சண்டை போட்டு செல்வதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவரது  வீட்டை ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி சென்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆவணங்களை உடனடியாக வழங்கும் படி அறிவுறுத்தினர் அதற்கு மணிகண்டன் அலட்சியமாக  பதில் கூறியுள்ளார். 

அதன் பின்பு அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து அவர் அறையில் சோதனை செய்தனர் அதில் அவர்  வைத்திருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பிறப்பு சான்றிதழ் இறப்பு சான்றிதழ் பட்டா மாறுதல் போன்ற அரசின் முக்கிய கோப்புகளை அரசு அலுவலகத்தில் இருக்க வேண்டிய ஆவணங்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்க வேண்டிய அரசுக் கோப்புகளை கைப்பற்றிய பொதுமக்கள் ஊர் பொது கோவிலில் வைத்து எரியோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் விசாரிக்கும் பட்சத்தில் இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்றும் ஊர் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.