வேளாண் துறை அதிகாரி பேசுவதாக கூறி விவசாயியிடம் நூதன முறையில் கொள்ளை...

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே செல்போன் மூலம் வங்கி வேளாண் துறை அதிகாரி பேசுவதாக கூறி  2.97 லட்சம் ரூபாய் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேளாண் துறை அதிகாரி பேசுவதாக கூறி விவசாயியிடம் நூதன முறையில் கொள்ளை...

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ளது அரியாணி பட்டி யை சேர்ந்தவர் ராஜேந்திரன் விவசாயியான இவர் கந்தர்வகோட்டை அருகே உள்ள புது நகரில் இந்தியன் வங்கியில் பத்தாண்டுகளுக்கு மேலாக கணக்கு வைத்து வரவு செலவு செய்து வருகிறார்.

கடந்த 4ந்தேதி அன்று ராஜேந்திரனுக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர் இந்தியன் வங்கியில் இருந்து வேளாண் அதிகாரி பேசுவதாக கூறியும் விவசாயிகள் பலன் பெறும் வகையில் அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து அந்த நபர் கேட்கும் வங்கி கணக்கு எண் ஓடிபி எண் உள்ளிட்ட விவரங்களை ராஜேந்திரன் அவருடைய செல்போனை பயன்படுத்தி அவருடைய பேரனும்  வங்கி விவரங்களை கூறி உள்ளனர். சிறிது நேரத்தில் அவருடைய செல்போன் எண்ணிற்கு வங்கியின் கணக்கிலிருந்து 2 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் வங்கியை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார் இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் புகார் அளிக்க வழி காட்டியது அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.