புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி வாட்ஸ் ஆப்.. ஆட்சியரையே ஏமாற்ற முயன்ற சம்பவம்!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பெயரில் போலி வாட்ஸ் ஆப் கணக்கு துவங்கி அவரையே ஏமாற்ற முயன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி வாட்ஸ் ஆப்.. ஆட்சியரையே ஏமாற்ற முயன்ற சம்பவம்!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவுக்கு வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் தன்னை கவிதா ராமு என்றும், தானே புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் என்றும் அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.

தன்னை அந்த நபர் ஏமாற்ற முயற்சிப்பதை அறிந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, அவரிடம் சாமானியர் போலவே பேச்சுக் கொடுத்துள்ளார். அப்போது தான் அவசரமான ஆலோசனைக் கூட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்த அவர், சில பொருட்களை வாங்கித் தந்து உதவுமாறு கேட்டுள்ளார்.

அதற்கான அமேசான் இணையதள லிங்கையும் அனுப்பி வைத்துள்ளார். இந்த உரையாடலை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கவிதா ராமு, ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலையா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த மோசடி புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சார்பில் புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது.