ஆப்கானிஸ்தானில் இருந்து ஆந்திராவுக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள்... கடத்தல் தொடர்பாக இருவர் கைது!

ஆப்கானிஸ்தானில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு 3 ஆயிரம் கிலோ ஹெராயின் கடத்தி வரப்பட்டது தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் விசாரணையை தொடங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து ஆந்திராவுக்கு அனுப்பப்பட்ட  போதைப்பொருள்... கடத்தல் தொடர்பாக இருவர் கைது!

ஆப்கானிஸ்தானில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு 3 ஆயிரம் கிலோ ஹெராயின் கடத்தி வரப்பட்டது தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் விசாரணையை தொடங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து கடல் வழியாக இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்கு 3 ஆயிரம் கிலோ எடையுள்ள ஹெராயின் போதை பொருள் கடத்தி வரப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 21 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கப்பலில் கொண்டுவரப்பட்ட 2 கொள்கலன்கள் குஜராத் துறைமுகத்தில் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, ஹெராயின் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆப்கன் நாட்டை சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த கொள்கலன்கள் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள கந்தகார் நகரில் செயல்பட்டு வரும் ‘ஹசன் ஹூசைன் லிமிடெட்’ என்ற நிறுவனத்திடம் இருந்து, ஆந்திர மாநிலம், விஜயவாடா, சத்தியநாரயணபுரத்தில் உள்ள, ‘ஆஷி டிரேடிங் நிறுவனம்’ என்ற முகவரிக்கு அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வருவாய் இயக்குனரக உளவுத்துறை அதிகாரிகள், விஜயவாடாவில் உள்ள ‘ஆஷி டிரேடிங் கம்பெனி’ மற்றும் அகமதாபாத், டெல்லி, சென்னை, காந்திதாம், மண்ட்வி ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும் போதை பொருள் கடத்தப்பட்டது தொடர்பாக ஆஷி டிரேடிங்’ நிறுவனத்தின் உரிமையாளர்களான சென்னையை சேர்ந்த தம்பதியை வருவாய் இயக்குனரக உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பான விசாரணையை அமலாக்க இயக்குனரகம் தொடங்கியுள்ளது.