கல்குவாரி ஏலம் விவகாரம்: திமுகவை சேர்ந்த 12 பேர் கைது!

பெரம்பலூரில் கல்குவாரி ஏலம் விடும் சம்பவத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக திமுகவை சேர்ந்த  12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரி ஏலம் விடுதல் நடைபெற்றபோது, அங்கு சென்ற  திமுக பிரமுகர்கள் கல்குவாரிக்கு விண்ணப்பிக்க வந்த பாஜக பிரமுகர் கலைச்செல்வன் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளை தாக்கியதாக கூறப்படுகிறது. தடுக்க முயன்ற கனிமவளத்துறை அதிகாரிகளையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் ஜெயபால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் கொலை மிரட்டல் விடுதல், பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல், கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவின் கீழ்  பெரம்பலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மு கருணாநிதி, அன்பழகன், தர்மராஜ், குடியரசன், அன்புச்செல்வன், லெனின், கருணாநிதி, இளங்கண்ணன், செல்லம் சேட்டு என்ற பெரியசாமி, மாரிமுத்து, வெத்தலை குமார் என்ற சிவக்குமார், ஆகியோரை பிடித்து கைது செய்த பெரம்பலூர் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.