சினிமா பாணியில் விரட்டி சென்று கள்ள நோட்டு கும்பலை மடக்கி பிடித்த போலீஸ்...!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த 6  பேரை போலீசார் சினிமா பாணியில் துரத்தி பிடித்தனர்

சினிமா பாணியில் விரட்டி சென்று கள்ள நோட்டு கும்பலை மடக்கி பிடித்த போலீஸ்...!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பட்டுச்சேலை வியாபாரியிடம் 1.50 லட்சம் பணத்தை மர்மகுப்லம் வழிப்பறி செய்துவிட்டு சென்றதாக, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த ஆம்பூர் கிராமிய போலீசார் விசாரணை செய்தனர். தனிப்படை அமைத்து வழிப்பறி கும்பலை போலீசார் தேடி வந்தநிலையில், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் பதிவான காரின் எண்ணை வைத்து கும்பலை தேடி வந்தனர்.

இந்தநிலையில் ஆம்பூரில் இருந்து மதுரையை நோக்கி சென்ற காரை போலீசார் சினிமா பாணியில் துரத்தி சென்றனர் .அப்போது மாதனூர் ஒடுக்கத்தூர் சாலையில் சென்றபோது வழிப்பறி கும்பலின் கார் விபத்துக்குள்ளாகியதாக கூறபப்டுகிறது.

அப்போது காரை மறித்த போலீஸ், காரில் இருந்த கள்ள நோட்டு மற்றும் ஆரணியை சேர்ந்த பெருமாள் மற்றும் வேலூர் சலவன்பேட்டை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், நரேஷ்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மெலும் அவர்களிடமிருந்த கார் மற்றும் 25 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின்படி மேலும் 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை செய்தனர். இச்சமபவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.