ஈ -சலான் லிங்க் மூலம் மோசடி; சென்னை போலீஸ் எச்சரிக்கை!

ஈ -சலான் லிங்க் மூலம் மோசடி; சென்னை போலீஸ் எச்சரிக்கை!

சென்னை போக்குவரத்து காவல் ஆணையம் தனது டிவிட்டர்  பக்கங்களில் ஈ செல்லான் லிங்க் மூலம் மோசடி நடைபெறுவதை  சுட்டிக்காட்டி மக்களை எச்சரித்து இருக்கிறது

அந்த டுவிட்டர் பதிவில் அரசாங்க ஈ செல்லான் லிங்க்கிற்கும் மோசடி கும்பல் பயன்படுத்தும் லிங்க்கும் இருக்கும் வித்தியாசங்களை சுட்டிக்காட்டி மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். மக்கள் ஈ-சலான் லிங்குகளை தொடுவதற்கு முன்பாக இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டதா? என்பதை சரி பார்த்து மக்கள் தொட வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றனர்.

இந்த மோசடி கும்பல் அனுப்பும் லிங்குகளை தொட்டால் நேரடியாக தங்களது வங்கி கணக்குகளில் இருந்து பண பரிவர்த்தனை நடைபெறுகிறது என்றும் லிங்குகளை தொடுவது மூலமாக நேரடியாக தங்களது வங்கி கணக்குகளை அவர்கள் பயன்படுத்த முடிகிறது என்றும் அதில் தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த மோசடிகள் வட மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாட்டினை குறி வைத்து தாக்கப்பட்டிருக்கிறது. ஆகவே தமிழக மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

இதையும் படிக்க:'சிறைவாசிகள் விடுதலை' அமைச்சர் ரகுபதியுடன் தமிமுன் அன்சாரி சந்திப்பு!