இரண்டு வெவ்வேறு விபத்துகளின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு...

கர்நாடகா மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் நடந்த இருவேறு விபத்துகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

இரண்டு வெவ்வேறு விபத்துகளின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு...

கர்நாடகா | துமகூரு மாவட்டம் குனிகல் தாலுக்காவில் நடந்த இருவேறு விபத்துகளின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. முதல் சிசிடிவி காட்சியில் ஆன்சிபால்யா என்ற இடத்தில் இளைஞர் ஒருவர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடை முன்பு சாலை ஓரத்தில் தனது இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி அதன் மீது அமர்ந்து செல்போன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது சரக்கு லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தன்னை நோக்கி வருவதை கண்டு அவர் உடனடியாக தனது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழை இறங்கிய போது லாரி இருசக்கர வாகனத்தின் மீது ஏறி விபத்து நடந்தது. இதில் மயிரிழையில் வாலிபர் உயிர் தப்பியுள்ளார். இருசக்கர வாகனம் இந்த விபத்தில் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. 

மேலும் படிக்க | திடீரென தீப்பிடித்து எரிந்த சரக்கு லாரி...

மேலும் அமருத்தூரு என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலை ஓரத்தில் உள்ள மண் பாதையில் தனது இன்னோவா காரை ஓட்டுநர் வேகமாக எடுத்துச்சென்றது.

அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக கடை எதிரே இருந்த தடுப்பு சுவர் மீது மோதி காற்றில் சுமார் இரண்டு மீட்டர் அளவு கார் தூக்கி வீசப்பட்டு தலைகீழாக விழுந்தது.

உடனடியாக கடையை சுற்றி இருந்த பொதுமக்கள் வாகன ஓட்டுநரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மேலும் படிக்க | திடீரென தீப்பிடித்து எரிந்த சரக்கு லாரி...