மணல் திருட்டை தடுக்க முயன்ற ராணுவ வீரருக்கு நேர்ந்த விபரீதம்!

மணல் திருட்டை தடுக்க முயன்ற ராணுவ வீரருக்கு நேர்ந்த விபரீதம்!

வேலூரில் மணல் திருட்டைத் தடுக்க முயன்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரரை ஓட ஓட வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூறில் உள்ள பொன்னை அணைகட்டு ஆற்றில், எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த சகோதர்கள் முனிசாமி, குமரேசன் ஆகியோர்,  சட்டவிரோதமாக மணல் அள்ளிக்கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது இதனைக் கண்ட முன்னாள் ராணுவ வீரர் உமாபதி (40)  அந்த சம்பவத்தை தனது போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அப்பொழுது, வீடியோ எடுத்த முன்னாள் இராணுவ வீரர் உமாபதியை முனிசாமி, குமரேசன் மற்றும் இவர்களது மகன்கள் சூர்யா, நவின் ஆகியோர் செல்போனை பறித்துக்கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். அத்துடன், அவர்களிடம் இருந்த அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களை வைத்து, உமாபதியை, விரட்டி விரட்டி வெட்டியுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த, முன்னால் இராணுவ வீரர் உமாபதி, அருகிலிருந்த மேல்பாடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

அதன் பின்னர், படுகாயமடைந்திருந்த உமாபதியை மீட்டு, பின்னர் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்து வருகின்றனர். 

இந்நிலையில், மேல்பாடி காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.