போலீசார் கொடுத்த டார்ச்சரால் தற்கொலை செய்த வாலிபர்... நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்...

திருவொற்றியூரில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டதற்கு காவல்துறையினரே காரணம் என்று கூறி திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசார் கொடுத்த டார்ச்சரால் தற்கொலை செய்த வாலிபர்... நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்...

சென்னை, திருவொற்றியூர் ராஜா சண்முக நகரை சேர்ந்தவர் பரசுராமன்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரசுராமனின் நண்பர்களுக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக இவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெயிலில் வெளியில் நிலையில் எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் செல்லாமல் முறையாக வேலைக்கு சென்று வந்திருக்கிறார். 

இந்நிலையில் சாத்தாங்காடு போலீசார் பரசுராமனின் வீட்டிற்கு வந்து அவரை காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்று பலமுறை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனமுடைந்த இளைஞர் பரந்தாமன் இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்வதற்கு காரணமாக இருந்த காவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதுவரையிலும் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி 12 மணிநேரமாக வீட்டிலேயே வைத்துள்ளனர்

பின்னர் வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக முடியாததால், வலுக்கட்டாயமாக உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பொழுது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனால் மேலும் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருவொற்றியூர் நெடுஞ்சாலை அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இறப்பிற்கு காரணமாக இருந்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வரை சாலை மறியலை விட மாட்டோம் என்றும் கூறி வருகின்றனர். இதனால் 2 மணி நேரமாக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.