துப்பாக்கியுடன் சொந்த பணத்தை கொள்ளையடித்த பெண்!!!

சொந்த கணக்கில் இருந்தே பணத்தைத் திருட துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்த பெண்ணால் பெரும் பர[பரப்பு ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கியுடன் சொந்த பணத்தை கொள்ளையடித்த பெண்!!!

லெபனானில் வங்கியில் துப்பாக்கியுடன் நுழைந்த பெண் ஒருவர், தனது கணக்கில் இருந்து பணம் எடுத்துச் சென்ற விசித்திர சம்பவம் அரங்கேறி உள்ளது. அந்நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரில் உள்ள ப்ளூம் என்ற வங்கிக்குள் புகுந்த அந்தப் பெண், துப்பாக்கியை காட்டி மிரட்டி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க | பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம்!!! சிரிப்பதா அழுவதா எனத் தெரியாமல் முழிக்கும் நிலை!!!

பொருளாதார நெருக்கடியை அடுத்து லெபனான் வங்கிகள் வைப்புத் தொகைகளில் இருந்து பணம் எடுக்க தடை விதித்துள்ளது. இந்த நிலையில் அந்தப் பெண் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்தச் செயலை அரங்கேற்றியுள்ளார்.

மேலும் படிக்க | நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது...!

இதனிடையே தான் பயன்படுத்தியது பொம்மை துப்பாக்கி என்றும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது சகோதரியின் சிகிச்சைக்காக பணத்தை பெற அவ்வாறு செய்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். ஆனால் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Lebanon: Woman with gun 'robs' bank to withdraw her own trapped money