பள்ளியில் கஞ்சா அடித்த மாணவர்களை தட்டிக்கேட்ட சக மாணவர்கள் மீது சரமாரியாக தாக்குதல்!

திருவண்ணாமலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கஞ்சா பயன்படுத்தும் மாணவர்களை தட்டிக்கேட்ட சக மாணவர்கள் மீது சரமாரியாக தாக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியில் கஞ்சா அடித்த மாணவர்களை தட்டிக்கேட்ட சக மாணவர்கள் மீது சரமாரியாக தாக்குதல்!

மல்லவாடி கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் சிலர் வெளியிலிருந்து கஞ்சா பாக்கெட்டுகளை வாங்கிவந்து பள்ளியில் உள்ள சில மாணவர்களுடன் சேர்ந்து கஞ்சா பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனை தட்டிக்கேட்ட ஆசிரியர்களை மாணவர்கள் மிரட்டி வருவதோடு மட்டுமில்லாமல் தரக்குறைவாகவும் பேசி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பள்ளியில் கஞ்சா பயன்படுத்தும் மாணவர்களை தட்டிக்கேட்ட சக மாணவர்கள் மீது சரமாரியாக தாக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் திருவண்ணாமலை காவல் நிலைய போலீசார், மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் பழையமல்லவாடி கிராமத்தை சேர்ந்த ராமராஜன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.