சட்டவிரோதமாக வைத்திருந்த 80 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்…

நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக வைத்திருந்த 80 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக வைத்திருந்த 80 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்…

நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக வைத்திருந்த 80 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ளவர்கள், மலைப்பகுதிகளில் வேட்டையாட உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக, நாட்டுத்துப்பாக்கிகளை வைத்துள்ளதை தடுக்கும் வகையில், ‘பொதுமக்கள், தாமாக முன்வந்து, துப்பாக்கிகளை காவல்நிலையங்களில் ஒப்படைப்பவர்களின் மீது, சட்டப்படி நடவடிக்கைகள் எதுவும் எடுக்க மாட்டோம் என, எஸ்.பி, சரோஜ்குமார் தாகூர் அறிவித்திருந்தார். அதன்படி இதுவரை மாவட்டத்தில், 80 உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்  நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை, 110 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், 80 துப்பாக்கிகள், தானாக ஒப்படைக்கப்பட்டது. அதற்கு, போலீசார் அடங்கிய குழுவினர், பொதுமக்களை சந்தித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். மேலும், 30 துப்பாக்கிகள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக, 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில், இது குறைவுதான். இம்மாவட்டத்தில், 500 முதல், 1,000 நாட்டுத்துப்பாக்கிகள் அனுமதி இல்லாமல் வைத்திருக்க கூடும். சம்மந்தப்பட்ட ஊர் தலைவர்கள் அல்லது ஊராட்சி தலைவர்கள் மூலம், பொதுமக்கள், தங்களிடம் உள்ள நாட்டுத்துப்பாக்கிகளை ஒப்படைத்துவிடலாம். இதுவரை, மாவட்டத்தில், 100 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, கத்தி, அரிவாள், துப்பாக்கி என, 35 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், உரிமம் இல்லாத துப்பாக்கியை ரகசிய இடத்தில் வைத்துவிட்டு, சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கோ அல்லது 94981 01020 என்ற எண்ணிற்கோ, மாவட்ட தனிப்பிரிவிற்கோ தகவல் தெரிவித்தால், காவல் துறையினர் அதை கைப்பற்றி உரிய முறையில் பறிமுதல் செய்துகொள்வர். அதைதவிர்த்து, போலீசார், தனிநபரிடம் இருந்து கைப்பற்றினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.