தடை செய்யப்பட்ட எண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை..!

தடை செய்யப்பட்ட  எண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை..!

கஞ்சா எண்ணெய் கடத்திய வழக்கில் மாலத்தீவை சேர்ந்த இரு இளைஞர்களுக்கு தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப் பொருள் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் இருந்து மாலத்தீவு செல்லும் விமானத்தில் கஞ்சா எண்ணெய் கடத்திய மாலத்தீவைச் சேர்ந்த அப்துல்லா ஆலிம், சம்சியா முகமது ஆகியோரை கடநத் 2019-ம் ஆண்டு மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

970 மில்லி லிட்டர் கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பபட்டது தொடர்பான இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கில் நீதிபதி ஜூலியட் புஷ்பா இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, இருவருக்கும் தலா 8 ஆண்டு சிறை தண்டனையும், மொத்தம் 3 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 இதையும் படிக்க   | ரூ.40 கோடிக்கு மேல் மோசடி செய்த ஈஷா குரூப்; திருச்சியில் பரபரப்பு!